என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் | 8 ஆண்டுகளாக நான் நினைத்ததை பேச சுதந்திரம் இல்லை : திலீப் வேதனை |
தெலுங்கில் ரவிதேஜாவுடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்த நடித்துள்ள கிராக் படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள ஸ்ருதிஹாசன், தனது கடந்த கால ஹிட் படங்கள் பற்றிய ஒரு பிளாஷ்பேக்கையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பு ரவிதேஜா தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வந்தார். நான் அவருடன் இணைந்து நடித்துள்ள இந்த கிராக் படம்தான் அவருக்கு நீண்ட இடைவேளைக்குப்பிறகு வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
அதேபோல், பவன்கல்யாண் வரிசையாக மூன்று தோல்வி படங்களை கொடுத்து வந்தார். அப்போது கப்பார் சிங் படத்தில் அவருடன் நான் ஜோடி சேர்ந்த பிறகுதான் அப்படம் ஹிட்டாக அமைந்தது.
அவரைப்போலவே மகேஷ்பாபுவும் பல தோல்விப் படங்களை கொடுத்து வந்தார். அவருடன் நான் ஸ்ரீமந்துடு என்ற படத்தில் இணைந்த நடித்தபோது அப்படம் ஹிட் அடித்தது. ஆக, தெலுங்கு சினிமாவில் முன்வரிசை ஹீரோக்களுக்கு நான் ஒரு லக்கி ஹீரோயினாக இருக்கிறேன் என்றொரு செய்தி வெளியிட்டு, தான் ஒரு ஹிட் படநாயகி என்பதை டோலிவுட்டிற்கு நினைவு கூர்ந்துள்ள ஸ்ருதிஹாசன், தற்போது பவன்கல்யாணுடன் வக்கீல் சாப் படத்தில் நடிக்கிறேன். இந்த படமும் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.