அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் சமுத்திரகனி, தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடிக்கிறார். இந்த படங்களை அடுத்து மலையாளத்தில் பிருதிவிராஜ் -பிஜூமேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.
இதுகுறித்து சமுத்திரகனி வெளியிட்டுள்ள செய்தியில், அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்காக அப்படத்திற்கு உரையாடல் எழுதும் திரிவிக்ரம் என்னை அணுகி, உங்களுக்கு ஒரு நல்ல கேரக்டரை உருவாக்கியுள்ளேன். கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனது கேரக்டர் பற்றி இன்னும் முழுமையாக எனக்கு தெரியாது என்றபோதும், மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் என்பதால் சம்மதம் சொல்லி விட்டேன் என்று கூறியுள்ள சமுத்திரகனி, ஜனவரி இறுதியில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் சொல்கிறார். இப்படத்தை சாகர் கே.சந்திரா இயக்குகிறார்.