‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தாக்கம் ஆரம்பித்த உடனேயே நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பின் அக்டோபர் மாதத்தில்தான் தியேட்டர்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
பக்கத்து மாநிலமான கேரளாவில் ஜனவரி 5 முதல் தியேட்டர்களை 50 சதவீத பார்வைகயார்களுடன் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் தியேட்டர்காரர்கள் ஜனவரி 13 அன்று 'மாஸ்டர்' படத்தைத் திரையிடுவதுடன் தியேட்டர்களைத் திறக்க முடிவெடுத்திருந்தனர்.
அதே சமயம், கொரோனா காலத்தில் மூடுப்பட்டிருந்த தியேட்டர்களுக்கு வரி விலக்கு, மின் கட்டண சலுகை ஆகியவற்றிற்குக் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், ஜிஎஸ்டி, கேளிக்கை வரி, செஸ் வரி ஆகியவற்றையும் செலுத்தி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே வைத்து தியேட்டர்களைத் திறந்தால் அது தங்களுக்கு லாபகரமாக இருக்காது என கேரள பிலிம் சேம்பர் முடிவு செய்தது. எனவே, தியேட்டர்களைத் திறக்காமல் தொடர்ந்து மூடியே வைப்பது என முடிவெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக கேரளாவில் ஜனவரி 13 முதல் 'மாஸ்டர்' படத்தைத் திரையிட சிக்கல் எழுந்துள்ளது. தமிழ்நாட்டை அடுத்து கேரளாவில் தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அங்கு சுமார் 200 தியேட்டர்கள் வரையிலும் படத்தைத் திரையிட முடிவு செய்திருந்தனர்.
தமிழ்நாட்டில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்குத் தான் அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படாததும் 'மாஸ்டர்' வெளியீட்டிற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.