துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. தமிழில் கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா தெலுங்குப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் வீடு வாங்கி அங்கேயே தங்கி நடித்து வருகிறார். படப்பிடிப்புகளுக்கு செல்வதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் அளித்த காரில் சென்று வந்தவர், தற்போது சொந்தமாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
ரேன்ச் ரோவர் காரை வாங்கியுள்ள ராஷ்மிகா அதன் முன் மகிழ்ச்சியுடன் நின்று கொண்டு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் எனக்குள்ளே வைத்துக் கொள்வேன். ஆனால், இந்த முறை இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்தப் பயணத்தில் நீங்களும் ஒரு பங்கு, அதை உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்பினேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.