கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
என்னவோ பிடிச்சிருக்கு, எழுதியதாரடி போன்ற படங்களை தயாரித்தவர் வெளிநாட்டில் வாழும் தமிழரான ஸ்ரீகந்தராஜா. இவர் இயக்கி இருக்கும் படம் சிக்கி முக்கி. ஜித்தேஷ் நாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் படம் திஷா பாண்டே நாயகியாக நடித்துள்ளார். "ஒரு நல்ல டாக்டர் ஒரு பெண்ணை இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் வாழ்கிறார். அந்த பெண்ணின் இந்திய காதலன் அவளை துரத்திக் கொண்டு மலேசியாவுக்கே வருகிறான். அவளை பல வழிகளில் துன்புறுத்துகிறான். ஒரு காலத்தில் காதலித்தவன்தான் என்றாலும் அவன் தவறானவன் என்பதை தெரிந்து கொண்டதால் வெறுக்கும் அவள். மலேசியாவில் அவனது துன்பங்களை பொறுத்துக்கொண்டு அவனை எப்படி சமாளிக்கிறாள். புகழ்பெற்ற தன் டாக்டர் கணவனை அவனிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. முழுபடத்தையும் மலேசியாவில் எடுத்து முடித்து விட்டோம். வெளிநாடுகளில் கணவனோடு வாழும் பெண்களுக்கு இந்தப் படம் ஒரு பாடமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர்.