உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார் மற்றும் பலர் நடிக்கும் 'பேட்ட' படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது.
24 மணி நேரத்திற்குள் 1 கோடி பார்வைகளையும், 5 லட்சம் லைக்குகளையும் கடந்தாலும் யு டியூப் டிரென்டிங்கில் 'பேட்ட' படம் இடம் பிடிக்கவில்லை. இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு சாதனை புரிந்தும் டிரென்டிங்கில் வர முடியவில்லையா என அவர்கள் தவித்தனர்.
அதற்குக் காரணம் ரஜினி ரசிகர்களே. பல பொய்யான கணக்குகள் மூலம் அந்த டிரைலரின் பார்வைகளையும், லைக்குகளையும் அவர்கள் கொடுத்ததால்தான் அது டிரென்டிங்கில் இடம் பெறமுடியவில்லை. 'ஆர்கானிக்' வியூஸ் என்பார்கள். அதுதான் உண்மையான கணக்கு. ஒரே ஐ.பி.யில் இருந்து பல முறை பார்த்திருந்தாலும் அதனால் டிரென்ங்கில் வர முடியாது.
விஜய், அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து போட்டி போடுவதாக நினைத்துக் கொண்டு ரஜினி ரசிகர்களே 'பேட்ட' படம் டிரென்டிங்கில் இடம் பெற முடியாத நிலையை உருவாக்கிவிட்டார்கள்.