மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு |

மாநகரம் உட்பட பல படங்களில் நடித்த நடிகர் சந்தீப் கிஷண் “பல ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் 'புதுப்பேட்டை' படம் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கிறது” என டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
அந்த டுவீட்டை ஷேர் செய்த செல்வராகவன் அவருக்கு நன்றியும் தெரிவித்தார். அந்த டுவீட்டுக்குக் கீழே, 'மாஸ்டர் பீஸ், 'புதுப்பேட்டை' இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்' என ஒரு ரசிகர்கள் டுவீட் பண்ணியிருந்தார். அதற்கு, “நிச்சயம் நேரம் வரும் ப்ரோ. இது கண்டிப்பாக நடக்கும்” என பதிலளித்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு ரிலீஸான 'புதுப்பேட்டை' படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க, சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப்படம், வெளியாகி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் பண்ணியிருக்கிறார் செல்வராகவன்.




