அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இரண்டாவது படம் நரகாசூரன். இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித், கிட்டி ஆகியோருடன் ஆத்மிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மலைப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தான் நடைபெற்று வந்தது. அப்போது, ஒருநாள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது, நரகாசூரனில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் சந்தீப் கிஷன், இந்திரஜித் ஆகிய இருவரும் சில மரங்கள் காற்றில் பயங்கரமாக ஆடியதைக் காண்பித்து அங்கே பேய் இருப்பதாக ஆத்மிகாவை அச்சுறுத்தியிருக்கிறார்கள். இதனால், பயந்து போன ஆத்மிகா, ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற ஒவ்வொரு நாள் இரவிலும் பயந்து நடுங்கியபடியே நடித்ததாக சொல்கிறார்.