மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் |

தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, தனக்கு படவாய்ப்பு கொடுப்பதாக சொல்லி தன்னை பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டவர்களைப் பற்றி தொடர்ந்து பொதுவெளியில் அம்பலப்படுத்தி வருகிறார்.
தெலுங்குத் திரையுலகத்தை கலங்கடித்த ஸ்ரீரெட்டி, கடந்த சில வாரங்களாக தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களைப் பற்றியும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவேந்திரா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் என தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களைப்பற்றி பாலியல் புகார் தெரிவித்தார் ஸ்ரீரெட்டி.
அவரது புகார் குறித்து சுந்தர்.சி, ராகவேந்திரா லாரன்ஸ் இருவரும் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த் இதுவரை கருத்து கூறாமலே அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில், #TamilLeaks coming this week wait for it....
Friday - 10 pm.
Saturday - 11 pm.
Sunday -12 am.
என்று டுவிட்டரில் ஸ்ரீரெட்டி அறிவித்திருப்பதாக ஒரு தகவல் பரவி படத்துறையை பதறவைத்தது. இந்நிலையில் ஸ்ரீரெட்டிக்கு டுவிட்டரில் கணக்கு இல்லை என்றும், யாரோ ஸ்ரீரெட்டி பெயரில் போலியான கணக்கை தொடங்கி மிரட்டியுள்ளனர் என்ற தகவல் தெரிய வந்ததும் நிம்மதியடைந்துள்ளனர்.