அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் டிக் டிக் டிக். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜெயம்ரவி பேசியதாவது:
முதன் முதலில் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை. இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள், அதுபோலத்தான் இதுவும். நானும், இயக்குனரும் தான் முதலில் கதை மீது நம்பிக்கை வைத்தோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் வந்தார்.
இந்த படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் இப்படத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்க வைத்தது. அரங்கத்தின் அமைப்பே நான் உள்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பை எளிதாக்கியது. ஏனெனில் ஸ்பேஸ் திரில்லர் என்று சொன்னவுடன் நடிகர்களுக்கு நடிக்கும் போது தயக்கம் இருக்கும், குழப்பம் இருக்கும், கேள்வி இருக்கும். ஆனால் இந்த படத்திற்காக போடப்பட்ட அரங்கத்தில் உண்மையான விண்வெளி ஆய்வகத்திற்கான உள்ளரங்க அமைப்பு விரிவாக இடம் பெற்றிருந்தது.
இந்த படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம், ஒரு நாள் இயக்குநர் இது போல் ஒரு கேரக்டர் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என கேட்டார் என்று சொன்னேன். நடிக்கலாம் என்றான். அதற்கு டான்ஸ் தெரிய வேண்டும் என்றேன். கத்துக்கலாம் என்றான். அவனுடைய இந்த தன் நம்பிக்கை படக்குழுவினரை கவர்ந்தது. அதனால் அறிமுகமாகியிருக்கிறான். அவருக்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு தந்தையாகவும், சக கலைஞராகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நல்ல படம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று மக்கள் கொடுக்கும் நம்பிக்கையில் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அந்த நம்பிக்கையில் தான் மிருதன், டிக் டிக் டிக் மாதிரியான வித்தியாசமான முயற்சிகளிலும் ஈடுபடுகிறேன் என்றார் ஜெயம்ரவி.