பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |
நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு, தெலுங்கில் அடுத்து தயாரிக்க இருக்கும் புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இவர் தெலுங்கில் தயாரிப்பாளராகவும், சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் இப்போது மணிரத்னம் இயக்க இருக்கும் பூக்கடை படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கில் குண்டலூர் கோடாரி என்ற பெயரில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஆதி பினிஷெட்டி, டாப்சி, சந்தீப் கிஷன் ஆகியோருடன் லட்சுமி மஞ்சுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். புதுமுகம் குமார் நாகேந்திரா இயக்குகிறார்.
1986-ல் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு அழகிய காதலை இப்படத்தில் சேர்ந்துள்ளார் புதுமுக டைரக்டர். விரைவில் துவங்க இருக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.
இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறுகையில், இளையராஜா அவர்கள் என்னுடைய படத்திற்கு இசையமைப்பதை எண்ணும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்திற்கான இசை கம்போசிங் சென்னையில் நடக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார்.