சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
அஜித் நடிக்கும் படங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு தகவல்கள் வெளியானாலும் அதை அவரது ரசிகர்கள் உலக அளவில் டிரண்டாக்கி விடுகிறார்கள். அந்தவகையில், விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசரை பெரிய அளவில் டிரன்ட் செய்து சமூகவலைதளங்களை பெரும் பரபரப்பை உருவாக்கி விட்டனர். இதனால் விவேகம் படத்திற்கான எதிர்பார்ப்புகளும் எகிறி நிற்கிறது.
இந்த நிலையில், தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா தனது பள்ளி விழாவில் நடனமாடிய சில புகைப்படங்கள் அஜித் ரசிகர்களிடம் கிடைத்திருக்கிறது. விளைவு, அஜித்தின் விவேகம் டீசர் ஒரு பக்கம், அனோஸ்காவின் நடன போட்டோக்கள் மறுபக்கம் என இணையதளங்களில் டிரன்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.