எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் |
பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளிவந்த படம் ஒரு கைதியின் டைரி. இதன் கதை, திரைக்கதையை எழுதியவர் கே.பாக்யராஜ். கமல், ராதா, ரேவதி, ஜனகராஜ், மலேசியா வாசுதேவன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இந்தப் படம் ஆக்ரி ரஸ்தா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆனது. இந்தி ரீமேக்கை இயக்கியது கே.பாக்யராஜ். ஆக்ரி ரஸ்தாவில் கமல் நடித்த கேரக்டரில் அமிதாப்பச்சன் நடித்தார். அவருடன் ராதா நடித்த கேரக்டரில் ஜெயப்பிரதாவும், ரேவதி நடித்த கேரக்டரில் ஸ்ரீதேவியும் நடித்தனர்.
தமிழில் தயாரான போது பாக்யராஜ் எழுதிய கிளைமாக்சை மாற்றி கமல் சிலைபோல் அமர்ந்து இருந்து வில்லனை கொல்வது போன்று அமைத்தார் பாராதிராஜா. இது பாக்யராஜுக்கு பிடிக்கவில்லை என்றாலும் குருநாதர் விருப்பம் என்று எதுவும் பேசாமல் இருந்து விட்டார். படம் இந்தியில் தயாரானபோது கிளைமாக்ஸ் தன் விருப்பப்படி மாற்றி எடுத்தார்.
ஒரு காட்சியில் அமிதாப்பச்சன் தன் மனைவியிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆனால், அமிதாப் எனது ரசிகர்களுக்கு ஆங்கிலம் தெரியாது நான் பேச மாட்டேன் என்றார். ஆனால் நீங்கள் ஆங்கில புலமை மிக்கவர் என்பது கதையின் படி உங்கள் மனைவிக்கும் தெரிய வேண்டும். உங்கள் ரசிகர்களுக்கும் தெரிய வேண்டும் கட்டாயம் பேசித்தான் ஆக வேண்டும் என்றார் பாக்யராஜ். அரை மனதுடன் பேசினார் அமிதாப்பச்சன். அந்த காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழில் பெற்ற வெற்றியை விட பல மடங்கு இந்தியில் வெற்றி பெற்றது. பின்னாளில் இது குறித்து கூறிய பாக்யராஜ் "கிளைமாக்சை மாற்றியதும், ஆக்ஷன் படத்தை செண்டிமெண்ட் படமாக மாற்றியதுமே ஆக்ரி ரஸ்தாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்" என்றார்.