ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

மதுரை மாவட்டம், மேலுாரைச் சேர்ந்தவர், கதிரேசன். இவரது மனைவி, மீனாட்சி. இவர்கள், நடிகர் தனுஷ் எங்கள் மகன். அவர், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என, மேலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தனுஷ், நான் தான் அவர்களின் மகன் என்பதற்கு, ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. மேலுார் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும். அந்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், தனுஷுக்கு, நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற கிளையில், அங்க அடையாள சோதனை நடந்தது. இந்நிலையில், கதிரேசன் தம்பதி, உண்மையான பெற்றோரை கண்டுபிடிக்க, எங்களுக்கும், தனுஷுக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என, மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கூடவே தனுஷூக்கு எடுக்கப்பட்ட அங்க அடையாள சோதனைகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. தனுஷ் தொடர்பான வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கில் உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷின் வழக்கை ஒட்டுமொத்தமாக மார்ச் 9-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.