தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் |
வடிவேலுவுடன் இணைந்து சுமார் 80 படங்களில் காமெடியனாக நடித்தவர் முத்துக்காளை. அப்படி அவர்கள் இணைந்து நடித்த அனைத்து படங்களிலுமே காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஒர்க்அவுட்டானது. இந்நிலையில், தற்போது காமெடியனாக ரீ-என்ட்ரியாகியிருக்கும் வடிவேலுவுடன் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் முத்துக்காளை.
அதுகுறித்து அவர் கூறுகையில்,
தற்போது அந்தமான், மதுரை மணிக்குறவன், பொம்மி வீரன், ராசாவின் பார்வையில் ராணியின் பக்கம் என பத்துக்கும் மேற்பட்ட பேய் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதில் ஒரு படத்தில் பேயை ஓட்ட பங்களாவுக்குள் போவேன். ஆனால் பேயே எனக்குள் வந்து விடும். பேயாக வெளியே வருவேன். இந்த மாதிரி ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான வேடங்கள்.
இந்த நேரத்தில் எனது குருநாதர் வடிவேலு அண்ணன் மீண்டும் அதிகமான படங்களில் காமெடியனாக நடித்து வருவது எனக்கு பெரிய சந்தோசத்தைக்கொடுத்துள்ளது. அவருடன் நான் நடித்த காமெடி காட்சிகள் பெரிய ரீச் ஆனது. எலி படப்பிடிப்பு நடந்தபோது நீதான் இந்த ரோலில் நடிக்கனும் என்று விருப்பப் பட்டு அழைத்தார் வடிவேலு. ஆனால் தற்போது அவர் நடித்துள்ள கத்திச்சண்டையில் நான் நடிக்கவில்லை. அந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னை அவர் வீட்டிற்கு அழைத்தார். அப்போது, 2 மணி நேரம் பேசினார். இனிமேல் நான் பண்ற படங்களில் தொடர்ந்து பண்ணுவோம் என்றார். புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது. முதல் பாகத்தில் ஒற்றனாக நடித்த நான் அடுத்த பாகத்திலும் இருப்பதாக சொன்னார். என்னை வடிவேலு விடவே மாட்டார். அவர் அதிகமான படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டதால் இனிமேல் நானும் பிசியாகி விடுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மேலும், எனக்காக புலிகேசி, எலி படங்களில் சில நாட்களை தள்ளி வைத்து விட்டு படப்பிடிப்பு நடத்தினார். வாத்தியார் படத்திலும் அப்படித்தான். நான் வேறு படப்பிடிப்பில் இருந்தால் எனக்காக காத்திருப்பார். அவருடன் நடித்த 80 படங்களின் காமெடி காட்சிகளும் டிவியில் வந்து கொண்டேயிருக்கிறது. அவருடன் நான் நடித்தாலே ஹிட்தான். அவரிடமிருந்துதான் காமெடி டயமிங்கை கற்றுக்கொண்டேன். பூவோடு சேர்ந்த நாறுதான் மணக்கும். வடிவேலு சாருடன் நடித்தால் அது ரீச்சாகி விடும். வடிவேலுவின் சிஷ்யன் நான். என் குருநாதர் வடிவேலுதான். பைட்டரான என்னை நடிக்க வைத்தவர் வடிவேலுதான். இது எல்லோருக்கும் தெரியும்.
மேலும், கடந்த வாரம் ஆதித்யா சேனலில் இம்சை அரசன், வடிவேலுவோடு நான் நடித்த அனுபவத்தைப்பற்றி பேசினேன். அவருடன் நான் நடித்த வந்த பசுமையான நினைவுகளை அசை போட்டேன். மிகச்சிறந்த காமெடியனான அவரைப்பற்றி நிறைய விசயங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொண்டேன். மனசுக்கு நிறைவாக இருந்தது.
இப்படி சொல்லும் முத்துக்காளை, தற்போது 7 படங்களில் ஷோலோ காமெடியனாக நடித்திருக்கிறேன். ஆனால் பல சிறிய படங்களாக இருக்கிறது.
அஞ்சுக்கு ஒன்னு படத்தில்கூட நானும், சிங்கம்புலியும் நடித்தோம். ஆனால் வெளியில் தெரியவில்லை. நூற்றுக்கணக்கான படங்களில் காமெடியனாக நடித்து விட்ட நான், சாலையோரம் படத்தில் வயதான கை, கால் இழுத்துக்கொள்ளும் அப்பாவாக நடித்தேன். பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். அதனால் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்தபோதும், அந்த மாதிரி குணசித்ர வேடங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். அது மட்டுமின்றி, பைட்டரான என்னால் ஆக்சன் வேடங்களிலும் நடிக்க முடியும். அதனால் எதிர்காலத்தில் முத்துக்காளையினால் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தற்போது எனக்கு அதிகரித்துள்ளது என்கிறார் முத்துக்காளை.