புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
பிரபுதேவா தயாரித்து நடிக்கும் படம் தேவி. பிரபுதேவாவுடன் தமன்னா, சோனுசூட், பராஃகான் நடித்துள்ளனர். ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி உள்ளது. வருகிற 7ந் தேதி இந்தி, தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளிவருகிறது.
இதில் தேவியாக நடித்திருப்பது தமன்னா. அமைதியான அடக்க மான குடும்ப பெண்ணாகவும், பழிவாங்கும் டெரர் பெண்ணாவுகம் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஒரு இந்தி நடிகையின் கொலை வழக்கின் பாதிப்பில் தயாராகி உள்ள படம். ஆனாலும் படம் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் இருப்பதாக கூறி எந்த கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்துள்ளது தணிக்கை குழு.
"எல்லோரும் பார்க்கும் வகையில் படம் இருக்க வேண்டும் என்று முதலில் இருந்தே திட்டமிட்டு திரைக்கதை அமைத்தோம். படம் திகிலாகவே நகர்ந்தாலும் அதை மிக நேர்த்தியாக படமாக்கி இருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.