பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கமல்ஹாசனின் இரண்டு மகள்களில் ஒருவரான ஸ்ருதிஹாசன் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் 'ஷமிதாப்' ஹிந்தி படத்தில் கதாநாயகியாக நடித்தார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிப்பில் வெளிவந்த அந்தப் படத்துக்குப் பிறகு அக்ஷரா ஹாசன் அப்படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் சிவாவும், அஜித்தும் மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ('AK-57') அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. இப்படத்தில் வரும் மற்றொரு முக்கியமான கேரக்டரில் 'பிரேமம்' படநாயகி சாய் பல்லவி நடிக்க இருக்கிறார் என்று சில வாரத்துக்கு முன் தகவல் வெளியானது.
சாய் பல்லவி நடிக்கவில்லை என்று பின்னர் அஜித்தின் அலுவலக வட்டாரத்திலிருந்து மறுப்பு சொல்லப்பட்டது.
அதன் பிறகு, சாய் பல்லவி நடிக்க மறுத்த அந்த கேரக்டருக்காக கமல்ஹாசன் மகள் அக்ஷா ஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் அநேகமாக அக்ஷரா ஹாசன் 'AK-57'-ல் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றும் தகவல் வெளியானது. தற்போது புதிய தகவலாக அஜித் படத்தில் நடிக்க அக்ஷரா ஹாசன் நடிக்க மறுத்துவிட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவல்களை தயாரிப்பு தரப்பினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அஜித் உடன் நடிக்க மறுத்த இளம் நடிகைகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்திருக்கிறது.