புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சசிகுமாருக்கு இது சோதனை காலம் போலிருக்கிறது. தன்னுடைய குருநாதர் பாலா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த 1000மாவது படமான 'தாரை தப்பட்டை' படம் தன்னை எங்கேயோ கொண்டு போய்விடும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவருடைய ஆசையை தடுமாற வைத்துவிட்டார் பாலா. அந்தப் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் உடனடியாக தன்னுடைய அடுத்த தயாரிப்பை ஆரம்பிக்காமலே இருந்தார்.
'வெற்றிவேல்' படமாவது தன்னைக் கொஞ்சம் காப்பாற்றும் என்று எதிர்பார்த்தார், ஆனால் அதுவும் வெற்றி பெறாமலே போய்விட்டது. இருந்தாலும் மீண்டும் எப்படியாவது ஒரு வெற்றியைக் கொடுத்துவிட வேண்டும் என்று அடுத்த தயாரிப்பில் இறங்கி முதல் ஷெட்யூலையும் முடித்துவிட்டார்.
அந்தப் படத்திற்கு 'கிடாரி' என்ற பெயரை இன்று அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தை பிரசாந்த் முருகேசன் இயக்குகிறார். இவர் இயக்குனர் வசந்தபாலனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். 'வெற்றிவேல்' படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்த நிகிலா இந்தப் படத்தில் மீண்டும் அவருடைய ஜோடியாக நடிக்கிறார்