பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

'பருத்தி வீரன்' படத்தின் பஞ்சாயத்துதான் கடந்த ஒரு வார காலமாக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தது. தான் கொடுத்த பேட்டி மூலம் சர்ச்சையை ஆரம்பித்து வைத்த தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, இன்று காலை வெளியிட்ட 'வருத்த' அறிக்கைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அமீரின் நண்பரும், இயக்குனரும், நடிகருமான சசிகுமார், “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன், ஞானவேல்ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன ?. 'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுததி இருந்தால்…' என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன ?.
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம் ?.
இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல்ராஜா சொல்ல வருவது என்ன ?.
பெயரிப்படாத அந்தக் கடிதம் யாருக்கு ?,” என சசிகுமார் சில பல கேள்விகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், இதற்கு 'கமா' போட்டு தொடர வைத்துள்ளார் சசிகுமார்.




