பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
மலையாளத்தில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பிரேமம்'. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த நிவின் பாலியை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டியிருக்கிறார் விஜய். 'பிரேமம்' படம் தமிழ் ரசிகர்களையும், திரையுலகத்தினரையும் அதிகம் கவர்ந்த படமாக இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய்யும் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் நிவின் பாலியை அழைத்துப் பாராட்டியுள்ளார்.
அது குறித்து நிவின் பாலி கூறியுள்ளதாவது, “விஜய் சாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் 'பிரேமம்' படத்தை மிகவும் ரசித்துள்ளார், அதோடு படத்தைப் பற்றியும், அதன் பின் உள்ள உழைப்பைப் பற்றியும் பாராட்டிப் பேசினார். மிகவும் எளிமையான மனிதர், ஒரு நட்சத்திர அந்தஸ்து உள்ளவராக தன்னை காட்டிக் கொள்ளவேயில்லை. நாங்கள் சினிமாவைப் பற்றியும், கேரளா மீதான அவரது அன்பைப் பற்றியும் பேசினோம். மறக்க முடியாத நாள்.
அவரைப் போன்றவர்களிடமிருநது கிடைக்கும் மதிப்பில்லாத பாராட்டுக்கள், எங்களுக்கு மேலும் மேலும் நல்ல படங்களைக் கொடுப்பதற்கான ஊக்கத்தைத் தருகின்றன. அவரது மதிப்பு மிக்க பழக்கமும், எளிமையான வாழ்க்கையும் பார்ப்பது தனி சுகம். 'தெறி' க்காக காத்திருக்கிறோம் சார்,” என அவர் குறிப்பிட்டள்ளார்.