புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கோவாவில் துவங்கிய சர்வதேச திரைப்பட விழாவில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்தாண்டுக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கோவாவில், ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடப்பது வழக்கம். 46வது திரைப்பட விழா, கோவா தலைநகர் பானாஜியில், இன்று(நவ.20) கோலாகலமாக துவங்கியது. இன்று துவங்கிய இந்த விழா அடுத்த, 10 நாட்களுக்கு நடக்கிறது. இந்த விழாவில், 187 வெளிநாட்டு படங்களும், 47 இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.
இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது : இசையில், இளையராஜா செய்த சாதனையை பெருமைப்படுத்தும் விதமாக, அவருக்கு இந்தாண்டுக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை பாலிவுட் நடிகர் அனில் கபூர் மற்றும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் வழங்கினர்.
இசையை கட்டாய படமாக்க வேண்டும் : விழாவில் இளையராஜா பேசும்போது... மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இசையை கட்டாயம் பாடமாக்க வேண்டும், அப்போது தான் வன்முறையை தடுக்க முடியும் என்று கூறினார்.
துவக்க விழாவின்முதல்நாளில் மேத்யூ பிரவுன் இயக்கிய, தி மேன் கூ நோ இன்பினிட்டி என்ற, ஆங்கில படம் வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில், முதல் படமாக திரையிடப்படுகிறது. இந்த படம், கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு பற்றியது. இந்திய படங்களுக்கான பிரிவில், ப்ரியமானஷம் என்ற சமஸ்கிருத படம் முதலில் திரையிடப்படுகிறது.
துவக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்றைய விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தி நடிகர் அனில் கபூர் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.