பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவும், ராஜேஷூம் ஒன்றாக இணைந்தனர். அதன்பின்னர் இப்போது மீண்டும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவுங்க என்ற படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆர்யா ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இமான் இசையமைத்து வருகிறார். பொதுவாக இமான் தனது ஒவ்வொரு படத்திலும் புதிய பாடகரை அறிமுகம் செய்து கொண்டே வருகிறார். அந்தவகையில் இப்போது பாலிவுட்டின் பிரபல பாடகர் அர்மான் மாலிக்கை தமிழில் பாட வைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த பாடலுக்கான ரெக்கார்ட்டிங் நடந்துள்ளது. ரொமாண்டிக் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. அர்மான் மாலிக் பாலிவுட்டின் பிரபல பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல ஆல்பங்களும் தயார் செய்துள்ளார். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று இமான் கூறியுள்ளார்.