பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இதுவரை 97 படங்கள் வரை நடித்து முடித்துவிட்டார் பஞ்ச் பாலகிருஷ்ணா. தெலுங்கு சினிமாவில் பஞ்ச் வசனங்களை அதிகமாக பேசியவர் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் பாலகிருஷ்ணா தான் முதல் இடத்தில் இருப்பார். இன்னும் 3 படங்கள் ரிலீசானால் சென்சுரி தொடும் அளவுக்கு இன்னும் சுறுசுறுப்போடு நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ”லயன்” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா, சமீபத்தில்தான் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, லயன் பாலகிருஷ்ணாவுக்கு 98வது படம். அடுத்ததாக 99வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார், இப்படத்திற்குத்தான் முதல் முறையாக பாலகிருஷ்ணாவுடன் இணையப்போகிறார் தமன். படத்தை இயக்கப்போவது இயக்குநர் ஸ்ரீவாஸ். பிரபல எழுத்தாளர்களான கோனா வெங்கட் மற்றும் கோபி மோகன் ஆகிய இருவரும் உருவாக்கிய கதையைத்தான் இயக்குநர் ஸ்ரீவாஸ் திரைப்படமாக உருவாக்கப்போகிறாராம்.