பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் பின்னணி பாடிக்கொண்டிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அதன்பிறகு ரஜினி, கமலுக்கு பாடியவர், பிறகு வந்த விஜய்-அஜீத்துக்கும் பாடினார். இப்போதும் சில படங்களுக்கு பாடிக்கொண்டிருக்கிறார். சினிமாவில் பாடும் வாய்ப்புகள் குறைந்து விட்டதால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும், சமீபகாலமாக மார்க்கெட்டில் இருக்கும் சில வடக்கத்திய பாடகர்கள் ஒரு பாடல் பாடுவதற்கே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அதோடு மும்பையில் இருந்து அவர்கள் சென்னைக்கு வந்து செல்ல பிளைட் டிக்கெட், தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டல் என்றெல்லாம் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது.
ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில், சீனியர் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன்னை யாராவது இசையமைப்பாளர்கள் பாட அழைத்தால், அவர்களிடம் இந்த தொகை தந்தால்தான் பாடித்தருவேன் என்றெல்லாம் பேசுவதில்லையாம். உங்களால் என்ன முடியுமோ கொடுங்கள். என் வேலையை நான் திறம்பட செய்து தருகிறேன் என்றுதான் சொல்கிறாராம். சிலர் நாங்கள் பண்ணுவது சின்ன பட்ஜெட் படம் என்று இழுத்தால், அப்படியென்றால் சின்ன தொகையை எனக்கு கொடுங்கள். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தனது பெரிய மனதை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துகிறாராம்.




