உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
ரஜினிகாந்த், டுவிட்டர் கணக்கு ஆரம்பித்து ஒரே நாளில் லட்சம் தொடர்பாளர்களைக் கடந்தார் என்று இந்தியா முழுவதுமே ஊடகங்கள் பரபரப்பாகப் பேசின. கோச்சடையான் படத்தின் வெளியீட்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ரஜினிகாந்தின் டுவிட்டர் கணக்கைப் பார்த்து முதலில் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் போகப் போக ஏமாற்றமே அடைந்தார்கள். மற்ற நட்சத்திரங்களைப் போல ரஜினிகாந்தும் தினமும் அவரைப் பற்றிய ஏதாவது ஒரு தகவலை வெளியிடுவார் என எதிர்பார்த்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதுவரை ரஜினிகாந்த் ஏழே ஏழு பதிவை மட்டுமே போட்டிருக்கிறார். அவையும் குறிப்பிடும்படியான பதிவாக இல்லை. அவை வெறும், நன்றியும், வாழ்த்தையும் சொன்ன பதிவுகள் மட்டுமே. கோச்சடையான் படம் வெளிவந்ததும் அந்த படத்தைப் பற்றிய பல தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவையும் வரவில்லை, அடுத்து அவர் நடிக்க ஆரம்பித்துள்ள லிங்கா படத்தைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை இடம் பெறவில்லை.
இந்தித் திரையுலகில் சமூக வலைத்தளங்களில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் ஒரே நடிகர் அமிதாப்பச்சன் மட்டுமே. தினமும் ஏதாவது ஒரு செய்தியையோ, கருத்தையோ அவர் பதிவிடுவது வழக்கம். ரஜினிகாந்தும் அப்படி ஏதாவது செய்து ரசிகர்களை மட்டுமல்லாது, மற்ற மக்களையும் கவர்வார் என ஊடகங்களும் எதிர்பார்த்தன. ஆனால், அப்படியெல்லாம் எதுவுமே நடக்காமல் போய்விட்டது.
ரஜினிகாந்தின் இந்த மௌனத்திற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. பலரும் கோச்சடையான் படத்தை விளம்பரப்படுத்துவதற்காகத்தான் ரஜினி இப்படி ஒரு விஷயத்தை செய்தார் என்கிறார்கள். ஆனால், படத்தைப் பற்றிக் கூட அவர் பெரிதாக எந்த கருத்தையும் பதிவிடவில்லை. தற்போது ரஜினிகாந்தின் டுவிட்டர் கணக்கை தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிவிட்டது. கடைசியாக கோச்சடையான் வெளியான அன்றுதான் படத்தை வாழ்த்தி ஒரு பதிவு போட்டிருக்கிறார். ஏறக்குறைய மூன்று வாரங்களாக எந்தவிதமான பதிவும் அவருடைய டுவிட்டர் கணக்கில் பதிவிடப்படவில்லை.
ரசிகர்களின் ஏமாற்றத்தைப் போக்குவாரா ரஜினிகாந்த் ?