'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா |
வீரம் படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்திருக்கிறார் மைனா விதார்த். படம் முடிவடைந்துள்ள நிலையில் விதார்த்திற்கு உடன் பிறவா நிஜ அண்ணனாக மாறிவிட்டார் அஜீத். இதுபற்றி விதார்த் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது: அஜீத் சார் படத்துல நடிக்கிறீங்களான்னு டைரக்டர் சிவா சார் கூப்பிட்டார். கரும்பு தின்ன கூலியான்னு மறுநாளே போயி நின்னேன். ஆனா அவுங்க கேட்ட தேதி என்கிட்ட இல்லை. அய்யோ... தல படத்துல நடிக்க முடியாம போயிடுமேன்னு கலங்கி நின்னப்போ அஜீத்சாரே என்னோட டைரக்டர் மீரா கதிரவன்கிட்ட பேசி தேதி ஒதுக்கி கொடுக்கச் சொன்னார்.
பொதுவா அஜீத் சார் நடிக்கிற படங்கள்ல அவரோட ஓப்பனிங் சீன் மாஸா இருக்கும். ஆனா "என்னோட ஓப்பனிங் சீன் முன்னாடி வளர்ற ஹீரோ விதார்த்துக்கு பக்காவான ஓப்பனிங் சீன் வையுங்க"ன்னு அஜீத் சார் சொன்னார். அப்படியேதான் நடந்தது.
ஒரு நாள் போன்ல கூப்பிட்டார் "சுவிட்சர்லாந்து போயிருக்கீங்களா?"ன்னு கேட்டாரு, இல்லேன்னு சொன்னேன். "அப்ப கிளம்புங்க போகலாம்" என்றார் ஒரே நாள்ல விசா ரெடி பண்ணி அழைச்சிட்டு போனார். எனக்கு அங்க ஷூட்டிங் கிடையாது. அவருக்குதான் ஷூட்டிங். ஆனாலும் என்னை அழைச்சிட்டு போய் ஊர் சுற்றி காட்டி, வேண்டியதை வாங்கித் தந்தார். அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் புல்லரிக்குது.
ஒரு நாள் "பைக்லேயே டூர் போலாமா?"ன்னு கேட்டார் நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன் சார்னு போயி நின்னேன். வைசாக்குலேருந்து ஒடிஸா வரைக்கும் அவரோட பைக் டூர். அவர் ஓட்டிக்கொண்டே செல்ல நான் பின்னாடி உட்கார்ந்து போனேன். அந்த பாக்கியம் யாருக்கும் கிடைச்சிருக்காது. ரோட்டு கடையில உட்கார்ந்து சாப்பிட்டு, பிளாட்பாரத்துல ரெஸ்ட் எடுத்து... என்ன ஒரு அனுபவம் அது.
சரியா 108 நாள் அவரோட இருந்திருக்கேன். அந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் என்னால மறக்கவே முடியாது. இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர் எனக்கு உடன் பிறவா அண்ணன்.