மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? | மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு |

'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் உடன் 'கொடி' படத்தில் நடித்திருந்தார். அனுபமா நடிப்பில் தெலுங்கில் வெளியா ன கார்த்திகேயா 2, டில்லு ஸ்கொயர் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் 'டில்லு ஸ்கொயர்' அடல்ட் கண்டன்ட் படம். இதில் அனுபமா படுக்கை மற்றும் முத்தக்காட்சிகளில் தாராளமாக நடித்து கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். முத்தக்காட்சிக்கென்று தனி சம்பளம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'பரதா ' என்ற படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். பிரவீன் கந்த்ரே குலா இந்தப் படத்தினை இயக்குகிறார். இந்த நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் 'லாக்டவுன்' என்ற புதிய படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளார். ஏ.ஆர்.ஜீவா இப்படத்தை இயக்குகிறார். என்.ஆர்.ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்கின்றனர். கே.ஏ.சக்திவேல ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா ஊடரங்கு காலத்தில் நடப்பது மாதிரியான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக இது உருவாகிறது.