'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கான 2026 - 29ம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 22ம் தேதி நடைபெறுகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க சட்ட விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். என்று தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்களான சீனிவாசன், ரஞ்சித் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தயாரிப்பாளர் சங்கம் தரப்பில், “சட்ட விதிகளை பின்பற்றியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட மற்ற கூட்டங்களிலும் மனுதாரர்கள் கலந்து கொண்டனர். அப்போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத உறுப்பினர்கள் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அதேநேரம் வழக்கு தாக்கல் செய்துள்ளவர்களில் நான்கு பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தியவர் என்ற முறையில், ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இம்முறையும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.