ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
தமிழில் வெளியான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி, மேல்மருவத்தூர் அற்புதங்கள், பதில் சொல்வாள் பத்ரகாளி, கைகொடுப்பாள் கற்பகாம்பாள் ஆகிய பக்தி படங்களை இயக்கியவர் 'ஓம்சக்தி' ஜெகதீசன். தேவி தரிசனம், தாய்மூகாம்பிகை, சுப்ரபாதம் ஆகிய படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். 95 வயதான அவர் முதுமை காரணமாக நேற்று காலமானார். உடல் இன்று மாலை போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. ஓம் சக்தி ஜெகதீசனுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஒரே தாய் ஒரே குலம், இவர்கள் இந்தியர்கள் ஆகிய சமூக படங்களையும் இயக்கியுள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில், நடுக்கடலில் பயணம் செய்யும் கப்பலில் படமாக்கப்பட்ட 'சிரஞ்சீவி' என்ற படத்தை கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார். டி.வியில் ஒளிபரப்பான 'மகான் ராமானுஜர்' என்ற தொடரை இயக்கியுள்ள இவர், எம்.ஜி.ஆர் நடித்த 'இதயக்கனி' படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். சரத்பாபு, சுமலதா நடித்த 'திசை மாறிய பறவைகள்' என்ற படத்தை இயக்கி, தமிழக அரசின் விருது பெற்றுள்ளார்.