ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மலையாள சினிமாவின் அடையாளம் மோகன்லால். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். அவர் இயக்கும் முதல் படம் 'பரோஸ்'. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ்வேகா , ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லாலின் நண்பரும் ஆஸ்தான தயாரிப்பாளருமான ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார்.
இந்த படத்தை மோகன்லால் குழந்தைகளை மகிழ்விக்கும் பேண்டசி படமாக உருவாக்கி வருகிறார். குழந்தைகளுடன் அவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், 'மைடியர் குட்டிச்சாத்தான்' படத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் முக்கிய படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 12ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.