குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
திரைப்பட இசை ஆல்பங்களுக்கு நிகராக தனி ஆல்பங்களுக்கும் தற்போது தனி மார்க்கெட் உருவாகி உள்ளது. அவை பெரிய அளவில் வெற்றி பெற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொண்டு வருகிறது. இதனால் முன்னணி இசை அமைப்பாளர்களே தனி இசை ஆல்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் இதில் முன்னணியில் இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா தனது யுவி ரிக்கார்ட்ஸ் மூலம் தனி இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் 'மணி இன் தி பேங்க்' எனும் பெயரில் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆல்பம் இணையத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதுடன் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார். இதனை அபிஷேக் ராகவன் என்பவர் இயக்கி உள்ளார். யுவனுடன் பாப் பாடகர்களும், மாடல் அழகிகளும் பாடி ஆடியுள்ளனர், முழு பாடலும் பாலைவனத்தில் படமாக்கப்பட்டுள்ளது.