'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

'முதலும் நீ முடிவும் நீ, சிங், தருணம்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் கிஷன் தாஸ். இவர் டிவி நடிகை பிருந்தா தாஸ் மகன். நடிகர் தியாகு மகன் சாரங் தியாகு இயக்கத்தில் இவர் நடித்த படம் 'ஆரோமலே'. 'இது தாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகர் மகள் ஷிவாத்மிகா இதில் ஹீரோயின். இந்த படம் காதல் கதையாக உருவாகியுள்ளது.
இந்த படப்பிடிப்பு சமயத்தில் ஹீரோவுக்கும், சுசித்ராவுக்கும் காதல் திருமணம் நடக்க, அவர் ஹனிமூன் செல்ல இருந்தாராம். ஆனால் படப்பிடிப்புக்காக ஹனிமூன் தேதிகளை ஹீரோ மாற்றி இருக்கிறார். நடிகர் தியாகுவும், டி.ராஜேந்தரும் நெருங்கிய நண்பர்கள். அதே போல் தியாகு மகன் சாரங்கும் சிம்பும் நண்பர்கள். அதனால் படத்தில் காதல் குறித்த வாய்ஸ் ஓவர் பகுதிகளுக்கு சிம்பு பேசியுள்ளார்.
மேலும் இந்த படத்தை டி .ராஜேந்தர், உஷா ஆகியோரும் பார்த்து பாராட்டியுள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் தியாகு இந்த படத்தில் நடிக்க வில்லையாம். டியூட் படத்துக்கு பின் ஹர்ஷத் கான் இதில் காமெடி பண்ணி உள்ளார். சித்து இசை அமைத்துள்ளார். பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், வேலைக்கு செல்பவர் என 3 கெட் அப்பில் ஹீரோ வருகிறார். ஷிவாத்மிகா தவிர, மேகா ஆகாஷ், நர்மதா ஆகியோரும் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.