ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
முதலும் நீ முடிவும் நீ படத்தில் நடித்து பிரபலமானவர் கிஷன் தாஸ். இதையடுத்து தருணம் படத்திலும் நடித்தார். அடுத்து ஆரோமலே என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் அவர் உடன் நடிகர் ஹர்ஷத் கானும் நடிக்கிறார். இவர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் குட்டி டிராகனாக நடித்தவர். இது தவிர விஜே சித்து இயக்கி, நடிக்க உள்ள 'டயங்கரம்' படத்திலும் ஹர்ஷத் கான் நடிக்கிறார். நாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்க, முக்கிய வேடங்களில் விடிவி கணேஷ் நடிக்கிறார். புதியவர் சரங் தியாகு இயக்குகிறார். சித்து குமார் இசையமைக்கிறார். மார்க் ஆண்டனி, எனிமி உள்ளிட்ட படங்களை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அறிமுக வீடியோவினை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். கலகலப்பாக நகரும் இந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.