நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். பைவ் ஸ்டார் படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்த கிருஷ்ண குமார் இயக்குகிறார். விஷ்ணு விஷால் சிலருடன் இணைந்து இந்த படத்தை த யாரிக்கிறார். தனது தம்பி குறித்து பேசியவர்,
‛‛ஏ.ஆர். முருகதாசிடம் தர்பார் உட்பட பல படங்களில் ருத்ரா உதவி இயக்குனராக வேலை செய்தார். என் அப்பாவின் சகோதரர் மகன். அவர் அப்பாவும் பல படங்களில் நடித்து இருக்கிறார். நான் சினிமாவுக்கு வர உதவியவர். நான் இதுவரை 21 படங்களில் நடித்து விட்டேன். அதிகம் ரொமான்ஸ் காட்சியில் நடித்தது இல்லை. ஆனால், தம்பி முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் நடித்துவிட்டான். மிதிலா பாஸ்கர் ஹீரோயின். இந்த படத்தில் நான் நடிகராகவே வருகிறேன். தம்பி உதவி இயக்குனராக வருகிறான். ஓஹோ எந்தன் பேபி என்ற அந்த கால புகழ்பெற்ற பாடல் படத்தில் இடம் பெறுகிறது. ஜூலையில் படம் ரிலீஸ்' என்கிறார்.