கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75 வயதில் சென்னையில் நேற்றுமுன்தினம் மாரடைப்பால் காலமானார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என கிட்டத்தட்ட 50 ஆண்டுளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீரியல், டப்பிங் ஆர்டிஸ்ட், தொழிலதிபர் என பன்முக திறமை கொண்டவர் ராஜேஷ்.
சினிமாவில் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர், கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாதவர். சமீபத்தில் அவர் துபாய் சென்று வந்தார். அதன்பின் அவரது உடலில் அசவுகரியங்கள் ஏற்பட மாரடைப்பால் இறந்தார். ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இளையராஜா, பார்த்திபன், சத்யராஜ், சிவகுமார், விஷால், நாசர், கார்த்தி, அஜய் ரத்னம், வையாபுரி, எம்எஸ் பாஸ்கர், பேரரசு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ராஜேஷின் மகள் கனடாவில் இருந்து வர வேண்டியிருந்ததால் அவரது இறுதிச்சடங்கு நடைபெறாமல் இருந்தது. தற்போது அவர் சென்னை திரும்பிவிட்டார். இன்று மாலையில் கீழ்ப்பாக்கத்தில் ராஜேஷின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று(மே 31) ராஜேஷ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் இடையே ஆறுதல் கூறினார். முன்னதாக ராஜேஷ் மறைவுக்கு எக்ஸ் தளத்தில் ரஜினி இரங்கல் தெரிவித்து இருந்தார்.
ராஜேஷ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி : ‛‛ராஜேஷ் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தியதே சான்று. சினிமா, அரசியல், விஞ்ஞானம், மெய்ஞானம் என அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. என்னை அடிக்கடி சந்திப்பார். நீங்க நீண்டநாள் வாழணும், அதற்கு என்னென்ன செய்யணும், சாப்பிடணும் எல்லாம் சொல்வார். நல்ல மனிதர், திடீரென அவர் இல்லையென்பது வருத்தமாக உள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்'' என்றார்.