டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தீயவர் குலைநடுங்க'. அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், 'பிக்பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, ஒ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். கிரைம் கலந்த திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. படத்தின் டீசரும் வெளியாகி திரில்லர் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற நவம்பர் 21ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.