7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா | மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி | டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசு | துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப் | புதிய சிக்கல்களில் விஜய்யின் 'ஜன நாயகன்' | துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை | புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா |
கார்த்திக், ஜீவிதா நடிப்பில் உருவான படம் 'தர்மபத்தினி'. கே.பாலச்சந்தரின் உதவியாளர் அமீர்ஜான் இந்த படத்தை இயக்கி இருந்தார். கவுண்டமணி, ராதாரவி, பூர்ணம் விஸ்வநாதன், சந்திரசேகர், சார்லி, விசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், ரவிபாபு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
போலீஸ் ஹீரோ, ரவுடி வில்லன் மோதல் கதைதான். படத்தில் கார்த்திக் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார். ஜீவிதா கான்ஸ்டபிளாக நடித்திருந்தார். இருவரும் இளையராஜா கச்சேரிக்கு பாதுகாப்புக்கு செல்லும்போது அங்கு இளையராஜா பாடும் 'நான் தேடும் செவ்வந்திபூவிது...' பாடலால் ஈர்க்கப்பட்டு இருவரும் காதலில் விழுவார்கள்.
இந்த காட்சிக்காக நிஜமாகவே இளையராஜா திரையில் தோன்றி பாடுவார். பின்னர் அது டூயட்டாக மாறி கார்த்திக்கும், ஜீவிதாவும் ஆடுவார்கள். இந்த பாடலில் சில துணை நடிகைகள் போலீஸ் உடை அணிந்து ஆடுவது போன்று படமாக்கப்பட்டிருந்தது.
படத்தின் விளம்பரங்கள், போஸ்டர்களில் கார்த்திக்கும், ஜீவிதாவும் போலீஸ் உடையில் கட்டிப்பிடித்து நிற்பது போன்று இடம்பெற்றது. சென்னை அண்ணா சாலையில் கார்த்திக், ஜீவிதா போலீஸ் உடையில் கட்டிப்பிடித்திருப்பது போன்ற பெரிய கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. இது பெண் போலீசின் கண்ணியத்தை குறைப்பதாக உள்ளது என்று அப்போது சட்டசபையில் பிரச்சினை கிளப்பப்பட்டது. இதனால் பின்னர் அந்த விளம்பர டிசைன்கள் நிறுத்தப்பட்டது, பாடலில் இடம்பெற்றிருந்த காட்சிகளும் நீக்கப்பட்டது.
பின்னாளில் இந்த பாடல் குறித்து இளையராஜா கூறும்போது "இந்தோளம் ராகத்தில் நான் உருகி உருகி பாடிய இந்த பாடலை படமாக்கிய விதம் பாடலின் ஜீவனை இழக்கச் செய்து விட்டது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.