மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்க, அனிருத் இசையமைக்க, அடுத்த மாதம் வெளியாக உள்ள 'கூலி' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'மோனிகா' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அப்பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி உள்ளார்.
துறைமுகத்தில் நல்ல வெயில் நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு பாடலாக அது தெரிகிறது. அப்பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து அப்பாடல் குறித்து பதிவிட்டுள்ளார் பூஜா.
“மோனிகாவுக்கு நீங்கள் அளித்த அனைத்து அன்பிற்கும் நன்றி. என் சினிமா வாழ்க்கையில் உடல் ரீதியாக கடினமான பாடல்களில் ஒன்றாக மோனிகா இருந்தது.
வெயில், எரிச்சல், அனல் காற்று, ஈரப்பதம், தூசு, கொப்பளங்களுக்கு இடையே... (தசை முறிவுக்குப் பின்...) கடுமையான அதிக ஆற்றல் கொடுத்து ஆடிய பாடல் இது. இத்தனை கஷ்டங்களுக்கு பிறகும் அந்த நடனம் கவர்ச்சியாகவும் எளிதாகவும் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். மோனிகாவுக்கு நான் என் முழு முயற்சியையும் கொடுத்தேன், இது திரையரங்குகளில் பார்க்க ஒரு பிரமிப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
மகாசிவராத்திரி அன்று நான் உபவாசம்(உணவு அருந்தாமல்) இருந்தபோது, இந்த பணியில் என்னுடன் நின்று, எல்லாவற்றிலும் எனக்கு ஆற்றல் அளித்த நடனக் கலைஞர்களுக்கு சிறப்பு நன்றி, பாராட்டுகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




