இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த 'கூலி' கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் வழங்கி இருந்தது. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தியேட்டர்களில் கூலி படத்தை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் வசூலும் பாதித்தது. அதோடு தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதிலும் சிக்கல் உள்ளது.
இந்தநிலையில் கூலி படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிடக்கோரி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
“தமிழ் படங்களில் சண்டை காட்சிகள் இல்லாத படங்களை பார்க்க முடியாது. இந்த படத்தில் மோசமான வார்த்தைகள் நீக்கப்பட்டு உள்ளன. மது அருந்தும் காட்சிகள் மறைக்கப்பட்டு உள்ளன. சென்சார் போர்டு தெரிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளன. எனவே, கூலி படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்' என தயாரிப்பு வாதிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தணிக்கை குழு, “ஏ சான்றிதழை முதலில் ஏற்றுக்கொண்ட படக்குழு தற்போது 'யுஏ' சான்றிதழ் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது. படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்குவது என அனைத்து குழுக்களும் சேர்ந்து ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. வன்முறை காட்சிகளை நீக்கி விட்டு 'யு/ஏ' சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்' என்று தெரிவித்தது.
இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.