பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை | அதிக சம்பளமா? அதிர்ச்சியான மமிதா பைஜூ | நடிகை ஆன பெண் இயக்குனர் | தியேட்டர் வசூலில் வெளிப்படை தன்மை : நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கோரிக்கை |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் 'கூலி'. இப்படத்தின் உலக அளவிலான வசூல் 600 கோடியைக் கடந்ததா அல்லது 550 கோடியைக் கடந்ததா என்பது குறித்து சரியான தகவல் இன்னும் வரவில்லை. 404 கோடி வசூல் என படம் வெளியான நான்காவது நாளில் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதே சமயம் படத்தின் அமெரிக்கா வினியோக நிறுவனம் வசூல் விவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தற்போது வரை அங்கு 6.95 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்கள். இந்த வாரமும் படம் தொடர்வதால் நிச்சயம் 7 மில்லியன் வசூலைக் கடக்கும் என்கிறார்கள். வெளிநாடுகளில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மொத்தமாக 20 மில்லியன் வசூலை அங்கெல்லாம் கடந்துள்ளது. இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதால், தியேட்டர்ளிலும் இந்த வாரத்துடன் ஓட்டம் நிறைவு பெற உள்ளது.