தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்க : நீதிபதி முன் கதறிய நடிகர் தர்ஷன் | அந்தக்காட்சியில் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கப்பட்டேன் : நடிகை மோகினி | சிவகார்த்திகேயனை வாழ்த்திய ரஜினி: ஏ.ஆர்.முருகதாசை புறக்கணித்தாரா? | மும்பையில் கைது செய்யப்பட்ட மஞ்சு வாரியர் பட இயக்குனர் ஜாமினில் விடுதலை | கேரளாவில் காந்தாரா 2ம் பாகத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல் | நானும் ஐஸ்வர்யா ராயும் ரூம் மேட்ஸ் : ஸ்வேதா மேனன் ஆச்சரிய தகவல் | தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே |
எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டத்தை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் ராம நாராயணனும் அதையே பின்பற்றி 'சட்டத்தை உடைக்கிறேன்' என்ற படத்தை இயக்கினார். 1984ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் மோகன், நளினி, சத்யராஜ், சில்க் சுமிதா உள்பட பலர் நடித்தார்கள். கங்கை அமரன் இசை அமைத்தார். இது 'அபிலாஷா' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சம்பவம் நடந்தது. சில்க் ஸ்மிதா ஒரு நடன காட்சியில் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது வில்லனாக நடித்துக் கொண்டிருந்த சத்யராஜூக்கு சில்க் ஸ்மிதாவுடன் ஆட வேண்டும் என்று ஆசை, இதை ராம நாராயணனிடம் அவர் சொல்ல, அவரும் சத்யராஜை, சில்க் ஸ்மிதாவுடன் ஆட வைத்தார்.
டான்ஸ் மாஸ்டர், டி.கே.எஸ்.பாபு நடன இயக்குனர். சத்யராஜூம், சில்க் ஸ்மிதாவும் ஆடும்போது சத்யராஜ் தவறுதலாக சில்க் ஸ்மிதாவின் காலில் மிதித்து விட அவருக்கு காயம் ஏற்பட்டு இனி அவருடன் ஆட மாட்டேன் என்று கூறிவிட்டார். வழக்கமாக இதுபோன்ற சம்பவங்களில் சில்க் கோபித்துக் கொண்டால் கிளம்பி போய்விடுவார், பின்னர் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வரவேண்டும்.
ஆனால் அன்றைக்கு அவர் கோபித்துக் கொண்டு செல்லவில்லை. இதனால் ராம நாராயணனும், டான்ஸ் மாஸ்டர் பாபும், 'அந்த பையன் புதுசு அவனுக்கு டான்ஸ் ஆடத் தெரியாது. பெரிய ஜமீன்தார் வீட்டுப் பையன் ஆர்வத்துல நடிக்க வந்துருக்கான், உன்கூட ஆடனும்னு ரொம்ப ஆசைப்பட்டான். அதான் ஆட வச்சோம், இதை பெருசு படுத்தாதம்மா' என்றனர். இதனால் மனசாந்தி அடைந்த சில்க் ஸ்மிதா சத்யராஜோடு தொடர்ந்து ஆடினார்.
இது பெரிய மேட்டர் இல்லை. இதை வச்சு ராம நாராயணன் ஒரு ஆட்டம் ஆடினார் பாருங்க அதான் மேட்டர். படம் வெளிவரும்போது மோகனுக்கு மார்க்கெட் இல்லை, நளினிக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் படம் சரியாக போகவில்லை. இந்த நேரத்தில் ஒருவர் படத்தின் தலைப்பை எதிர்த்து கோர்ட்டுக்கு போனார். உடனே ராமநாராயணன் படத்தின் தலைப்பை 'சட்டத்தை திருத்துங்கள்' என்று மாற்றி சத்யராஜூம், சில்க் சுமிதாவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி நிற்கும் அந்த நடன காட்சியை பெரியதாக விளம்பரப்படுத்தி புதிய படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். படம் அவருக்கு லாபத்தை கொடுத்தது.