வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் |
பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் நடிகர் விநாயகனும் சர்ச்சையும் என்று சொல்லும் அளவிற்கு பிரபல மலையாள நடிகர் விநாயகன் அடிக்கடி ஏதாவது வில்லங்கம் செய்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். விஷால் நடித்த 'திமிரு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார்.
இவர் இப்படி படங்களில் நடித்து பிரபலமானதை விட அவ்வப்போது பொது இடங்களில், அது போலீசார் என்று கூட பார்க்காமல் யாரிடமாவது வம்பிழுத்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இப்படி ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் ஒரு கடைக்காரரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு அதன்பிறகு அவர் மீது அங்குள்ள காவல் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட தனது அப்பார்ட்மென்ட்டில் இருந்து எதிரில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் நபரை பார்த்து அநாகரிகமாக வார்த்தைகளில் திட்டியதுடன் தான் அணிந்திருந்த வேட்டியை கழற்றி கூட அசிங்கமான சைகை செய்தார் விநாயகன். பிறகு அதற்காக வருத்தம் தெரிவித்தும் வீடியோ வெளியிட்டார்.
இப்படி இரண்டு மாதங்கள் அமைதியாகப் போன நிலையில், கடந்த ஒரு வாரமாக கொல்லம் பகுதியில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் விநாயகன். அப்போது அங்குள்ள அஞ்சலம்மூடு என்கிற ஹோட்டலில் அவர் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்தார். நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பும்போது ஹோட்டல் நிர்வாகிகளுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அவர் மது போதையிலும் இருந்தார்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரித்த போது, அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் விநாயகன். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அதன் பிறகு அவரை ஜாமினில் விடுதலை செய்துள்ளனர். ஹோட்டல் நிர்வாகிகளுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் விநாயகன் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.