'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட்டின் பிரபல நடிகரான ஜாக்கி ஷெராப் தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளவர். இவரது மகன் டைகர் ஷெராப் தற்போது பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் டைகர் ஷெராப்பை கொல்வதற்காக தான் ஏவப்பட்டு உள்ளதாக மும்பை காவல் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் மணீஷ்குமார் சுஜிந்தர் சிங் என்கிற நபர் தான் இந்த மிரட்டலை விடுத்தார் என கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இப்படி அவர் கொலை மிரட்டல் விடுத்தது பொய் என்று தெரிய வந்தது.
அதாவது அதற்கு முன்பாக மணீஷ்குமார் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் அங்கே தனக்கு தரவேண்டிய உரிய சம்பளத்தை தராமல் மேனேஜரும் சூப்பர்வைசரும் இழுத்தடித்ததால் அவர்கள் மீது ஏற்பட்ட கோபத்தில் அவர்களை சிக்க வைப்பதற்காக அவர்கள் தான் தன்னை டைகர் ஷெராப்பை கொலை செய்ய ஏவினார்கள் என்றும் அதற்கான ஆயுதங்கள் வாங்குவதற்காக தனக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள் என்றும் போலீசில் பொய்யாக ஒரு மிரட்டலை அவர் வெளியிட்டார் என்பதும் விசாரணையில் பெரிய வந்துள்ளது. தற்போது அவர் மீது எப் ஐ ஆர் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.