இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் சைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுளக்ஸ்', சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். போதைப் பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே இவர் கைதானார். சமீபத்தில் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையின் போது பிடிபட்ட பெண் ஒருவர் நடிகர்கள் சைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி என்கிற இருவருக்கும் தாங்கள் ரெகுலராக போதை பொருள் சப்ளை செய்து வருவதாக கூறியிருந்தார்.
மேலும் மலையாள நடிகையான வின்சி அலோசியஸ் என்பவரும் சைன் டாம் சாக்கோ போதை பொருள் பயன்படுத்திவிட்டு படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் அத்துமீறியதாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி சாக்கோவிடம் விசாரிக்க போலீசார் கொச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடிய சிசிடி காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில் போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் எர்ணாகுளம் போலீசார் சாக்கோவிடம் நான்கு மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் கொச்சி போலீசார் அவரை கைது செய்தனர்.