காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படத்தின் டிரைலர் நேற்று(ஏப்., 18) வெளியானது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஆரம்பத்தில் வெளிவந்த படங்களுக்குப் பிறகு வெளிவந்த 'பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்கள் எல்லாமே 'டான்' சம்பந்தப்பட்ட கதைகள்தான். அதைப் போலவே இந்த 'ரெட்ரோ' படத்தையும் உருவாக்கி இருக்கிறார் என்பது மட்டும் டிரைலரைப் பார்த்ததும் புரிகிறது.
ஆனால், என்ன கதையாக இருக்கும், என்னென்ன கதாபாத்திரங்கள் இருக்கும் என்பதெல்லாம் டிரைலரில் தெளிவாக சொல்லப்படவில்லை. ஆனால், 'ரெட்ரோ' படத்தை விதவிதமாக 'குக்' செய்திருப்பார் என்று மட்டும் தெரிகிறது. 'ராவான' படமாக இருக்கும் என்று தெரிந்தாலும் என்டர்டெயின்மென்ட்டாக இருந்துவிட்டால் மட்டும் போதும் என்று சூர்யா ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தற்போது யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் இந்த டிரைலர் 10 மில்லியனை நெருங்கியுள்ளது. அதே சமயம் 24 மணி நேரத்தில் 19 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'கங்குவா' டிரைலரின் சாதனையை முறியடிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. டிரைலவருக்கு வரவேற்பு கிடைத்துவிட்டு படத்திற்குக் கிடைக்கவில்லை என்றால்தான் சிக்கல்.
இருந்தாலும் ஒரு புது கூட்டணி, காதல், காமெடி, ஆக்ஷன், மியூசிக், என்டர்டெயின்மென்ட் என 'ரெட்ரோ' புக்கிங்கில் 'ரெட்' ஆகக் காட்டினால் தயாரிப்பாளரும், நாயகனுமான சூர்யாவுக்கு 'ரெட்டிப்பு மகிழ்ச்சி'யாக இருக்கும்.
பார்ப்போம், 'ஷோ' எப்படி ஓட்டப் போகிறார்கள் என்று ?....