சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம் | ஆக்ஷன் கலந்த துள்ளல் உடன் வெளிவந்துள்ள ‛ஆயா ரே பாபா' பாடல் | சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை | சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஷாருக்கானின் கிங் பட வாய்ப்பை இழந்த நயன்தாரா | பயங்கரவாத தாக்குதலால் ‛தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சியை தள்ளிவைத்த சல்மான் | அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த சூர்யா | ரெயின்போவை ரசிக்கும் மகன்கள் : நயன்தாரா | சமரச உடன்பாடு : நடிகர் தர்ஷன் மீதான வழக்கு தள்ளுபடி | தொடரும் பட சண்டைக்காட்சிகளுக்கு வரவேற்பு : நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன ஸ்டண்ட் சில்வா |
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் தர்ஷன்.. தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு அண்ணாநகரில் உள்ள இவரது வீட்டின் முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வைக்கும் ஒருவரின் மகன் தனது காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்று உள்ளார். காரை நீண்ட நேரமாக எடுக்காமல் இருந்ததால் இதுகுறித்து தர்ஷனுக்கும் நீதிபதியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இது குறித்து ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் மாறி மாறி புகார் அளித்தனர். இதில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதரப்பினரும் இந்த வழக்கில் தாங்கள் சமரச உடன்படிக்கை செய்து கொள்ள முன்வந்துள்ளதாகவும், ஆதலால் தங்கள் வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் கூறினார்கள். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.