கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான தொடரும் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. பொதுவாக இப்போது இருக்கும் மலையாள ஹீரோக்களில் சண்டைக் காட்சிகளின் மூலம் ரசிகர்களை வசீகரிப்பதில் இப்போதும் மோகன்லால் தான் முதலிடத்தில் இருக்கிறார். அந்த வகையில் அவரது படங்களில் தொடர்ந்து சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ஸ்டன்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா தான். ஒன்றிரண்டு படங்களில் மட்டும் பீட்டர் ஹெய்ன் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இந்த தொடரும் படத்திலும் ஸ்டண்ட் சில்வா தான் பணியாற்றியுள்ளார்.
கிளைமாக்ஸுக்கு முந்தைய அரைமணி நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று சண்டைக்காட்சிகள் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. மூன்றுமே விறுவிறுப்பாகவும் கதையின் போக்கில் இருக்கை நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகர்களிடம், “அவர்களை விடாதே.. அடி” என்று உத்வேகத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பரபரப்பாக உருவாக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து நெகிழ்ந்து போன ஸ்டண்ட் சில்வா தனது சோசியல் மீடியா பக்கத்தில், “தொடரும் படத்திற்கும் படத்தில் என்னுடைய வேலைக்கும் கிடைத்து வரும் பாசிட்டிவான விமர்சனங்களை பார்த்து மகிழ்ந்து போயிருக்கிறேன். மோகன்லால் சாருக்கும் மொத்த படக்குழுவிற்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.