2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
1995ம் ஆண்டு வெளிவந்த 'தொட்டாசினிங்கி' படத்தின் மூலம் தேவயானியை தமிழில் அறிமுகப்படுத்தியவர் கே.எஸ் அதியமான். தற்போது கே எஸ் அதியமானின் உதவியாளர் சிவா ஆறுமுகம் இயக்கி உள்ள 'நிழற்குடை' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.எஸ் அதியமானுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தேவயானி நன்றி தெரிவித்தார்.
விழாவில் அவர் பேசியதாவது : என்னுடைய குடும்ப விழா இது. இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் 'காதல் கோட்டை' என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான்.
அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை. 30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். என்றார்.
இந்த படத்தை தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரித்துள்ளார். விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, தர்ஷன் சிவா, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் . வரும் மே மாதம் 9ம் தேதி வெளியாகிறது.