லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'நிழற்குடை'. வருகிற மே மாதம் 9ம் தேதி திரைக்கு வருகிறது. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் தர்ஷன் சிவா, இளவரசு, ராஜ்கபூர் மனோஜ் குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் சிவா ஆறுமுகம் கூறும்போது "குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கதையில் இருக்கிறது. பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள்.
நான் முதன் முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் 'தொட்டாசினுங்கி'. அந்த படத்தில் தான் தேவயானியும் கதாநாயகியாக அறிமுகமானார். பல வருடங்களுக்கு பின் நான் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், தேவயானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.