எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'சென்ட்ரல்'.
'காக்கா முட்டை' படத்தில் நடித்து பிரபலமான விக்னேஷ் இந்த படத்தின் கதையின் நாயாகனாக நடித்துள்ளார். கதையின் நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார். இயக்குனர் பேரரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் சித்தா தர்ஷன், ஆறு பாலா, மேதகு ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இலா இசை அமைத்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் பாரதி சிவலிங்கம். படம் பற்றி அவர் கூறும்போது "இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம். உழைப்பாளர்களுக்கு சாதி, மதம், மொழி, இனம் எதுவும் கிடையாது அனைவரும் ஒன்றுதான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
ஒரு குக்கிராமத்திலிருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை சென்ட்ரலுக்கு வேலைக்கு வரும் நாயகன், முதலாளித்துவம் என்ற பெயரால் என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறான் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தான் என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறோம்" என்றார்.